அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Monday, June 22, 2015

மரணம் முதல் மறுமை வரை

மரணம்:
உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)

மரணம் வரும் வேலையில் நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தாலும் அல்லது தகர்க்க முடியாத கோட்டையில் இருந்தாலும் சரி, எந்த நேரததில், எந்த இடத்தில், எப்படி மரணம் அடைய வேண்டும் என்று இறைவன் வகுத்து வைத்துள்ளானோ! அதில் சிறிது கூட கூடவோ அல்லது குறையவோச் செய்யாது.இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒன்றே அன்றி வேறில்லை. இதையே நம்மை படைத்த இறைவன் திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

Monday, June 15, 2015

மனிதப்படைப்பின் நோக்கம்!

        மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மட்டும் ஏன் தான் இந்த மனித இனம் சிந்திக்காமல் இருக்கின்றதோ நமக்குத் தெரியவில்லை!
இன்னும் ஒரு விடயம் என்னவென்றால், ஏதாவது ஒரு பொருள் உருவாக்கப்பட்டு அதன் எதிர்பார்ப்பு அல்லது நோக்கம் நிறைவேறாத போது அது ஓரங்கட்டப்படுவதையும் நாம் கண்டு கொண்டுதானிருக்கிறோம். எனவே நிச்சயமாக மனிதப்படைப்பிற்க்கு ஒரு உயர்ந்த நோக்கம் இருக்கத்தான் வேண்டும் என்பதனை உலக நடப்புக்களே நமக்கு உணர்த்துகின்றன.

Wednesday, June 10, 2015

இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். ‍ அதிசயத்தக்க‌ (மறைக்கப்பட்ட) வரலாறு...

                             அதிசயத்தக்க‌ (மறைக்கப்பட்ட) வரலாறு


இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.
===============================================================

முஸ்லீகள் எங்கிருந்து வநதார்கள்?
எங்கிருந்து இஸ்லாமிய‌ மார்க்கததை ஏற்றுக் கொண்டார்கள்?
வரலாறு.
இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு முதலில் இந்த மண்ணுக்கு இஸ்லாம் எப்படி வந்தது?
                                                          அன்றைய தோற்றம்
இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித்.
1400 year old Cheraman Juma Masjid

Saturday, June 6, 2015

குர்ஆன் இறைவேதமா?

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

Sunday, May 31, 2015

வேண்டாம் புகையிலை, வேண்டாம் புற்றுநோய், இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்!




இன்று உலக புகையிலை எதிர்ப்புத்தினம் ஆகும். உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள்

Thursday, May 28, 2015

மியன்மரில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? ஒரு விரிவான வரலாற்று பார்வை?


பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது. பர்மா மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில்