அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Thursday, May 28, 2015

மியன்மரில் நடந்தது என்ன? இப்போது நடப்பது என்ன? ஒரு விரிவான வரலாற்று பார்வை?


பர்மா தற்போது மியான்மர் என அழைக்கப்படும் இந்த தேசம் இந்தியா, வங்தேசம், சீனா, தாய்லாந்து, லாவொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் வங்காள விரிகுடாவின் கிழக்கு கரைகளில் அமைந்துள்ள மிகவும் இயற்கை வளம் மிக்க நாடு. இருந்த போதிலும் நிலையான அரசியல் சூழலின்மையாலும் உள்நாட்டு போர்களாலும் உலக பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நாடாகவே விளங்குகிறது. பர்மா மருத்துவம் மற்றும் சுகாதாரத்தில்
ஆப்பிரிக்க நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளது. மனித உரிமை மீறல்கள், குழந்தை தொழிலாளர்கள், ஆள்கடத்தல், பேச்சுரிமையின்மை ஆகியவற்றில் உலகளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
சுமார் 130 இன மக்கள் பர்மாவில் வாழ்கின்றனர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையினர் பௌத்தர்கள். முஸ்லிம்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பழங்குடியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். பர்மாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதனுடைய 6 கோடி மக்கள் தொகையில் 4% சதவிகிதம் என பௌத்தர்களால் சூழப்பட்டுள்ள பர்மா அரசு கூறினாலும் பர்மாவில் வாழும் பெரும்பான்மையான முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதால் 10% அளவிற்கு முஸ்லிம்கள் வாழக்கூடும் என்று பிற அரசு சாரா அமைப்புகள் கூறுகின்றன. இதில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாழக்கூடியது பர்மாவின் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள ராக்கினே மாகாணம். இது அராகன் மாகாணம் எனவும் அழைக்கப்படுகிறது. முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளுக்கிடையில், அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அகதிகளை விட மோசமான நிலையில் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் வாழ்கின்றது. எல்லாவற்றையும் விட மோசமாக பேச்சு சுதந்திரமும், கருத்து சுதந்திரமும் இல்லாத காரணத்தால் ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்கள் நடத்தும் வன்முறைகள் உலக மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படாமலேயே இருந்துள்ளது.
புத்த மதம் சாந்தி, சமாதானம், அஹிம்சை ஆகியவற்றிற்கு பெருமை பெற்றது என்பது தான் உலக மக்கள் அறிந்து வைத்திருப்பது. ஆனால் இந்த புத்த பிட்சுக்களின் வெறியாட்டம் ஆயிரக்காணக்க முஸ்லிம்களையும், பழங்குடியினரையும் அழித்திருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பொத்தர்களின் மதவெறித்தன்மையை நாம் உணர்ந்தது ஏதோ இலங்கையில் தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது தான். ஆனால், இஸ்லாம் பர்மாவில் வந்தேறிய காலம் முதலாகவே உணவிற்காக கூட ஒரு உயிரினத்தை கொல்ல தயங்கும் பௌத்தர்கள் தன்னுடைய மத வெறித்தன்மையினால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளனர்.
இணையதளத்தின் ஆளுமையினால், அண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்தர்களால் நடத்தப்பட்ட ஜூன் 2012 ராக்கினே மாகான கலவரங்கள் உலக மக்களின் பார்வையில், முஸ்லிம்கள் பர்மாவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சிறிதளவு உணர வைத்துள்ளது. பர்மாவில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிரõக வன்முறைகளும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருக்கும் போதிலும் நம்மில் பலரின் செவியில் முதல் முறையாக விழுந்திருக்கக்கூடியது ஜூன் மாதம் நடைபெற்ற ராக்கினே மாகான கலவரமாகத் தான் இருக்கக் முடியும். இஸ்லாம் பர்மாவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னதாக நுழைந்தது. அன்றிலிருந்து இன்று வரை பல மன்னர்கள், பல சாம்ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களின் காலணியாதிக்கம், ஜனநாயகம், இராணுவ ஆட்சி என பல்வேறு முறைகளில் பல்வேறு மக்களின் ஆதிக்கத்தில் பர்மா இருந்துகொண்டு வருகிறது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்திருந்தாலும், எத்தனை சாம்ராஜ்ஜியங்கள் ஆண்டிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை அகதிகளை போல தான் பர்மா முஸ்லிம்களின் நிலை உள்ளது. முஸ்லிம்களின் நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக பர்மாவில் காலங்காலமாக நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டகிறது இக்கட்டுரை.
பர்மாவின் முதல் முஸ்லிமும், இஸ்லாத்தின் வருகையும் அல்லாஹ்வின் பாதையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வார்த்தைகளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்கு நபித் தோழர்கள் பல கண்டங்கள், பல கடல்கள் தாண்டி சென்றனர். அதன் தொடர்ச்சியாக பர்மா மக்களிடையே இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக வந்திறங்கியவர் முஹம்மது இப்னு அல் ஹனஃபிய்யா. இவர் ஹிஜ்ரி 60ஆம் ஆண்டு (கி.பி. 680) பர்மாவின் முதல் முஸ்லிமாக அந்நாட்டின் வங்காள விரிகுடாவின் கரைகளில் தனது காலடியை எடுத்து வைத்தார். இவரை தொடர்ந்து துருக்கி, பாரசீகம், அரேபிய தீபகற்பம், சீனா ஆகிய நாடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வணிகர்களாகவும் மாலுமிகளாகவும் வரத்தொடங்கினர். அரசர் அனவ்ரஹாதா கி.பி 1055ல் பர்மாவின் முதல் பேரரசை நிறுவுவதற்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவின் முக்கிய வணிகங்களில் பங்கேற்று அங்கு குடியேறத் தொடங்கினர். முஸ்லிம்களின் வருகையாலும் அவர்களின் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொண்டதாலும் பல பூர்வீக பர்மா மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர். 9 ஆம் நூற்றாண்டில் சீனாவை தேடி நிலத்தின் வழியாக வந்த பாரசீகர்கள் பர்மாவின் வடக்கு எல்லை மூலமாக இங்கு குடியேற தொடங்கினர். சீன முஸ்லிம்களை பாந்தேயர்கள் (கச்ணtடச்தூண்) என்றும் பூர்வீக பர்மாவின் முஸ்லிம்களை பாதியர்கள் (கச்tடடிண்) என்றும் அழைத்தனர். அதுமட்டுமல்லாமல் அங்குள்ள பூர்வீக மக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலமாகவும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாகவே முஸ்லிம்கள் பர்மாவோடும் அதன் மக்களோடும் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டனர். புத்த சாம்ராஜ்ஜியங்களில் முஸ்லிம்கள் வன்முறைகளின் தொடக்கம பர்மாவின் முதல் புத்த சாம்ராஜ்ஜியம் 11ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அதில் முதலில் உருவானது பாகன் சாம்ராஜ்ஜியம். புத்த சாம்ராஜ்ஜியங்களின் துவக்கத்திற்கு பிறகு தான் புத்த பிட்சுகளின் மதவெறியாட்டமும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் தொடங்கின. மன்னான் யசாவின் (ஏட்ச்ணணச்ண ஙுச்த்ச்தீடிண) எனப்படும் பர்õவின் அரசர்கள் பற்றிய வரலாற்று குறிப்பேட்டில் முதல்முறையாக புத்த சாம்ராஜ்ஜியத்தில் முஸ்லிம்களின் வருகையை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குறிப்பேட்டின்படி கி.பி. 1055ஆம் ஆண்டு பயாத் குடும்பத்தை சார்ந்த பயாத் வி, பயாத் தா எனப்படும் இரு அரேபிய முஸ்லிம் சகோதர மாலுமிகளின் கப்பல் நடுக்கடலில் சேதமாகி தண்ணீரில் மூழ்கியதால் அருகில் உள்ள தாடன் எனும் கடற்கரை நகருக்கு தப்பிச்சென்றனர். அந்த ஊரை சார்ந்தவர்கள் அவர்களை ஒரு முழு யானையின் வலிமையுடையவர்கள் என்று கூறினர். இதை கேட்ட தாடனின் மன்னன் இவர்களால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி இரு சகோதரர்களில் ஒருவரை தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது கொன்று விட்டான். இவரே புத்த சாம்ராஜ்ஜியத்தால் கொல்லப்பட்ட முதல் முஸ்லிம். மற்றொரு சகோதரர் பயத் தா தப்பி ஓடி பாகன் சாம்ராஜ்ஜியத்தின் அரசன் அனவ்ரஹ்தாவிடம் தஞ்சம் புகுந்து அரசனிடமே வேலை செய்தார். அவர் பொபா என்ற இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஷ்வே பியின் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இரு மகன்களை பெற்றெடுத்தார். ஷ்வே பியின் சகோதரர்களும் தங்கள் தந்தையின் வழி அனவ்ராஹ்தா மன்னரிடத்தில் பணி புரிந்தனர். பின்பு மன்னரின் போர்ப்படையில் போர் வீரர்களாக திகழ்ந்தனர். சீனா பர்மாவின் பாகன் சாம்ராஜ்ஜியத்தை தாக்க முற்படும் பொழுது இந்த சகோதரர்கள் பலம் வாய்ந்த சீன படையையே அஞ்ச வைத்து விரட்டி அடித்தனர். இருந்த போதிலும் ஷ்வே பியின் சகோதரர்கள் புத்த கோயில் கட்டுவதற்கு உதவாததால் மதவெறிபிடித்த அனவ்ரஹதா மன்னன் இச்சகோதரர்கள் இருவரையும் கொன்று வீழ்த்தினான்.
இதற்கு பின்பும் பாகன் சாம்ராஜ்ஜியத்தின் போர்ப் படையில் வீரர்களாக அதிக அளவில் அம்மன்னர்கள் முஸ்லிம்களையே பணியமர்த்தினர். அப்போதைய சட்டத்தின்படி மன்னரின் இனத்தை சார்ந்த மற்றொருவன் மன்னரை கொன்று வீழ்த்தினால் அவனே மன்னன் எனும் சட்டம் இருந்தது. இதை கருத்தில் கொண்ட அரசர்கள் முஸ்லிம்களையே போர் படையின் தளபதிகளாகவும், படை வீரர்களாகவும் பணியில் அமர்த்தினர். இருந்த போதிலும் நீதியுடனும் விசுவாசத்துடனும் இருந்த முஸ்லிம்களை புத்த வழிபாடுகளில் ஈடுபடாத ஒரே காரணத்தால் புத்த மன்னர்கள் அவர்களுக்கு மரண தண்டனை அளித்தனர்.
16ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் அதிக அளவில் புத்த மன்னர்களிடத்தில் வேலை செய்ய தொடங்கினர். கி.பி. 15501589 வரை ஆண்ட பயின்ட் நாங் எனப்படும் அரசன் முஸ்லிம்கள் தங்கள் உணவிற்காக கால்நடைகளை ஹலால் முறையில் அறுப்பதை தடை செய்தான். மேலும், முஸ்லிம்களின் பண்டிகைகளான ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்), ஈதுல் ஃபித்ரா (நோன்பு பெருநாள்) ஆகியவற்றை கொண்டாடுவதற்கு தடை விதித்து புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை நிரூபித்தான். இவன் முஸ்லிம்களை கட்டாயமாக புத்த மதத்திற்கு மதம் மாற்றம் செய்யவும் உத்தரவிட்டான். மறுத்த முஸ்லிம்களுக்கு வழக்கம் போல் மரண தண்டனை வழங்கப்பட்டது. முதல் முறையாக பெரிய அளவில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது 17ம் நூற்றாண்டில் தான். முகலாய மன்னரான ஷாஹ் ஜஹானின் மகன்களான ஷாஹ் ஷûஜாவிற்கும் ஔரங்கசீப்பிற்கும் ஷாஹ் ஜஹானின் மரணத்திற்கு பிறகு யார் அடுத்து நாட்டை கைப்பற்றுவது எனும் போட்டி நிலவிய போது இதில் அவ்ரங்கசீப்பிடம் தோற்றுப்போன ஷாஹ் ஷûஜா தன்னுடைய படைகளுடன் தற்போதைய பர்மாவின் அராகன் பகுதிக்குள் தஞ்சம் புகுந்தார். அப்போதைய அராகன் பகுதியின் புத்த அரசராக இருந்த சண்டதுடாமா (கி.பி. 16521687) ஷாஹ் ஷûஜா அராகன் பகுதியில் தன் படைகள் மற்றும் குடும்பத்துடன் குடியேற அனுமதித்தார். ஷாஹ் ஷுஜா ஹஜ்ஜுக்கு செல்வதற்கு அராகன் அரசனிடம் தன்னிடம் இருக்கும் வெள்ளி மற்றும் தங்கத்தை செலுத்தி கப்பல் வாங்குவதென முடிவெடுத்தார்.
ஆனால், சண்டதுடாமா எனும் அந்த அரசன் ஷாஹ் ஷûஜாவின் மகளை கப்பலுக்கு விலையாக கேட்டான், மேலும், ஷாஹ் ஷûஜாவின் செல்வத்தை பார்த்து பேரõசை கொண்டான். இதை கேட்ட ஷாஹ் ஷûஜா தன்னுடைய படையை வைத்து அராகன் அரசனை அழிக்க முற்பட்டார். பின்பு தோற்றுப்போன அவரும் அவருடைய படை வீரர்களும் கொல்லப்பட்டனர். மேலும் பெண்களை சிறையில் அடைத்து அவர்களுக்கு உணவளிக்காமல் சாகும் வரை பட்டினி போடும் படி கட்டளையிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், அராகன் பகுதிக்கு வந்த அனைத்து இந்திய முஸ்லிம்களையும் கொன்று குவித்தான் சண்டதுடாமா. புத்த அரசர்களின் முஸ்லிம்களுக்கு எதிரான கொடுமைகளும் வன்முறைகளும் ஒவ்வொரு நூற்றாண்டும் அரங்கேறிக்கொண்டே இருந்தன. 18ம் நூற்றாண்டின் இறுதியில் போடவ்பயா எனும் புத்த அரசன் மையடு எனும் பகுதியை சேர்ந்த நான்கு பர்மா முஸ்லிம் இமாம்களை பன்றி இறைச்சி உண்ணும் படி வற்புறுத்தி அவர்கள் மறுத்த போது அவர்கள் நான்கு பேரையும் கொலை செய்து விட்டான்.
புத்த மன்னர்களின் சுமார் ஆயிரம் ஆண்டு ஆட்சியின் போது நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் இது ஒரு துளியாகவே இருக்கக்கூடும். வரலாற்றில் பதிவு செய்யப்படாத பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு இருக்கலாம். இந்த புத்த மன்னர்களின் ஆட்சியின் போது தான் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று புத்த சாமியார்கள் அஹிம்சையை போதித்து பல்வேறு மக்களை அழைத்தனர். ஒரு பக்கம் புத்தர்கள் அமைதியானவர்கள், ஒரு எறும்மைக் கூட கொல்வதற்கு தயங்குபவர்கள் என்று உலக மக்கள் நினைத்துக்கொண்டிருக்க புத்த மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சிக்கு பர்மா ஒரு உதாரணம்.
ஆங்கிலேய ஆட்சியில் பர்மாவின் முஸ்லிம்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கொன்பாவுங் வம்சம் பர்மாவை ஆண்டு கொண்டிருந்த போது தன்னுடைய நிலப்பரப்பை விரிவுப்படுத்த முடிவு செய்தது . இந்தியாவின் அஸ்ஸாமை ஒட்டியுள்ள அராகன் பகுதியை தங்களுடன் இணைக்க முடிவு செய்தனர். அஸ்ஸாம் ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்ததால் அஸ்ஸாமிற்கு பாதிப்பு வந்துவிடுமோ என்று நினைத்தார்கள் ஆங்கிலேயர்கள். இது முதல் ஆங்கிலோபர்மா போருக்கு (1823 1826) வித்திட்டது. இந்த போரில் வெற்றி பெற்ற ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியாவுடன் அராகன் பகுதியை இணைத்தனர். அராகன் பகுதி ஆங்கிலேயர்களிடம் வந்தவுடன் ஏராளமான வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை அவர்கள் அராகன் பகுதியில் பணியமர்த்தினர். அவ்வாறு அராகன் பகுதியில் வந்தேறியவர்கள் தான் இன்று ராக்கினே மாகாணத்தில் உள்ள ரோஹிங்கிய முஸ்லிம்கள், இவர்கள் பர்மாவின் சிறுபான்மை முஸ்லிம்களுள் ஒரு பெரும் பகுதியாக இன்று வரை இருக்கின்றனர்.
பின்னர் திருப்தி அடையாத ஆங்கிலேயர்கள் தெற்கு பர்மாவில் உள்ள பர்மா தேக்குகளையும், ரப்பர் மரங்களையும் அடைய வேண்டும் என நினைத்து 1852ல் இரண்டாம் ஆங்கிலோபர்மா போரும், 1885ல் மூன்றாம் ஆங்கிலோபர்மா போரையும் நிகழ்த்தி முழு பர்மாவையும் ஆங்கிலேயர்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். 1885 வரை மியான்மர் எனும் பெயரைக் கொண்டிருந்த அந்நாட்டை ஆங்கிலேயர்கள் அப்போது பர்மா என்று மாற்றினர். இப்பொழுது மீண்டும் மியான்மர் என மாற்றப்பட்டு விட்டது. முழு பர்மாவையும் அடைந்த உடன் பர்மாவை பிரிட்டிஷ் இந்தியாவின் உடன் ஒரு மாகாணமாக இணைத்தது ஆங்கிலேய அரசு. பிரிட்டிஷ் காலானியாக பர்மா இருந்த போது கூலி வேலைக்காரர்களாகவும், சிறு தொழில் செய்வதற்கும் இந்திய முஸ்லிம்கள் பர்மாவில் குடியேற தொடங்கினர். 1931ம் ஆண்டில் பர்மாவின் தலைநகரம் ரங்கூனில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இந்தியர்களாக இருந்தனர். அதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். ஆரம்ப காலகட்டங்களில் முஸ்லிம்களும், பௌத்தர்களும் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்திருந்தாலும் அது நீடிக்கவில்லை. 1930 இந்தியர் எதிர்ப்பு கலவரம் 1930ம் ஆண்டு மே 26ம் தேதி ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது பர்மா மக்களுக்கும் இந்தியர்களுக்குமிடையே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. ஆங்கிலேயர்கள் நூற்றுக்கணக்கான இந்தியர்களை ரங்கூன் துறைமுகத்தில் கப்பல் பணியாளர்களாக அமர்த்தினர். இந்தியர்கள் அனைவரும் ஒரு வார காலம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பொழுது எந்த முன்னறிவிப்புமின்றி இந்தியர்களுக்கு பதிலாக நூற்றுக்கணக்காக பர்மா மக்களை வேலையில் அமர்த்தினர். இதை கண்டு திடுக்கிட்டுப் போன இந்தியர்கள் தங்களின் வேலை பறிபோய்விடாமல் காப்பாற்ற ஆங்கி÷லயர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்தனர். அதன் பிறகு அடுத்த நாள் வேலைக்கு வந்த அனைத்து பர்மா மக்களிடத்தும் ஆங்கிலேயர்கள் உங்களின் தேவை இனிமேல் எங்களுக்கு இல்லை என கூறினர். இதனைக் கேட்ட நூற்றுக்கணக்கான பர்மா பௌத்தர்கள் அனைவரும் இந்தியர்களுக்கு எதிராக வெறியாட்டத்தை துவங்கினர். இது மிகப்பெரிய இந்தியர் எதிர்ப்பு கலவரமாகவும், இந்தியர்களுள் பெரும்பான்மையானோர் முஸ்லிம்களாக இருக்கும் காரணத்தால் இது பின்பு முஸ்லிம் எதிர்ப்பு கலவரமாகவும் மாறியது.
கலவரம் துவங்கி அரை மணி நேரத்திற்குள் இருநூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் (இந்தியர்கள் என்று அழைக்கப்பட்டாலும் பெரும்பான்மை முஸ்லிம்கள்) படுகொலை செய்யப்பட்டு அருகில் உள்ள ஒரு ஆற்றில் வீசப்பட்டனர். ஐந்திற்கு மேற்பட்டோர் ஒன்று கூடி ஆயுதங்களை கீழே போட மறுத்தால் காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. இருப்பினும், இரு நாட்களில் கலவரம் பர்மா முழுவதும் பரவி நாடு முழுவதும் அனைத்து பகுதியில் வாழும் முஸ்லிம்களும், இந்தியர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய இயலவில்லை. இந்திய முஸ்லிம்களும் பூர்விக பர்மாவின் முஸ்லிம்களும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும், இந்திய முஸ்லிம்கள், பர்மா முஸ்லிம்கள், இந்திய இந்துக்கள் ஆகிய அனைவரையும் பௌத்தர்கள் ஒன்றாக ‘கலா’ என்று அழைத்து கலவரங்களின் போது இவர்கள் அனைவரையும் ஒன்றாகவே கருதி அழித்தனர்.

No comments:

Post a Comment