இன்று உலக புகையிலை எதிர்ப்புத்தினம் ஆகும். உலகம் முழுவதும் வருடந்தோறும் மே, 31 ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் ஆக(World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. இந்நன்நாளில், சில சமூக அமைப்புகள் புகையிலை பயன்படுத்துவதால், புகை பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பற்றி பொது மக்களிடம் எடுத்துச் சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்கள்
எலும்புக்கூடு முகமூடி அணிந்துக் கொண்டு, புகை, மற்றும் மது குடிப்பதால் ஏற்படும் அபாயங்களை விளக்குகிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம்.... கடந்த 1987 இ ல் உலக சுகாதார நிறுவனம் ( WHO) மே - 31 ஆம் நாளை உலக புகை எதிர்ப்பு தினமாக அறிவித்தது.
புள்ளி விவரம்...
புகை அடிமைகள்...
உலகில் ஆண்கள் 47%, பெண்கள் 12% புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்கள். வளர்ந்த நாடுகளில் 42% ஆண்களும் 24% பெண்களும், வளரும் நாடுகளில் 48% ஆண்களும் 7% பெண்களும் புகைபிடிக்கிறனர். இந்தியாவில் 53% ஆண்களும் 3% பெண்களும் (குறிப்பாக வயது வந்த இளம் பெண்கள்) புகைப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதாகத் தகவலகள் தெரிவிக்கின்றன.
அதிக மரணங்கள்..
எய்ட்ஸ் நோய் (எச்.ஐ.வி.), காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிட புகையிலையினால் ஏற்படுவது அதிகமாக இருக்கிறது.
அபாயகரமான பாதிப்பு... புகைபிடிப்பது மூலம் வாய், நூரையீரல்,சிறுநீரகம், மார்பகம் ஆகியவற்றில் புற்றுநோய், ஆஸ்துமா, காசநோய், இதயநோய், உயர் ரத்த அழுத்தம், செவிட்டுத் தன்மை, மலட்டுதன்மை என பல நோய்கள் வருகின்றன.
தொடர்புகைப்பழக்கத்தால் நுரையீரல்புற்றுநோய் விரைவிலேயேவருகிறது.புற்று நோய், இதயநோய் ஆகியவற்றை புகைப் பழக்கம் 30 சதவீதம் அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. புகைப் பழக்கத்திற்கு உலகம் முழுவதும் 115 (2011 நிலவரப்படி) கோடிக்கும் மேலானவர்கள் அடிமையாகியுள்ளனர். உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களான இவர்கள்தான் அதிகமாக புகை பிடிக்கிறார்களாம்.
தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.. புகை பிடிப்பதால் அல்லது பிறர் பிடிக்கும் சிகரெட், பீடி ஆகியவற்றின் புகையை நுகர்வதால் இருமல், சளி உருவாகி ஆஸ்துமா பிரச்சனை வருகிறது. ஆஸ்துமா இருப்பவர்கள் புகை பிடித்தால், அது ஆஸ்துமாவை மேலும் அதிகரித்து, மூச்சுத் திணறலை உருவாக்கி உயிருக்கே உலை வைக்கிறது. கர்ப்பிணி பெண்கள் புகைபிடித்தால் அது கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை பாதிக்கும்.
ஆர்வக் கோளாறுகள் சிலர், பெற்றோர், உறவினர், நண்பர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் போன்றவர்களை பார்த்துப் புகைபிடிக்கிறார்களாம். ஒருவர் புகை பழக்கத்தை நிறுத்தினால் இதய நோய், நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் நோய்கள், வலிப்பு நோய் போன்றவை படிப்படியாக குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் ஆகும்...
புகை பழக்கத்தைக் கை விட்டு 10 - 15 ஆண்டுகள் கழித்துதான் மனிதன் முழு ஆரோக்கியம் பெறுகிறான். அது வரைக்கும் அதன் பாதிப்பு உடலுக்குள்ளே இருந்துக் கொண்டேதான் இருக்கும்
வெளிநாட்டில் அரிது...
தாய்லாந்து, தைவான், மலேசியா போன்ற நாடுகளில் வயது வந்தோருக்கு மட்டுமே கண்டிப்பாக பீடி, சிகரெட் போன்றவை விற்பனை செய்ய வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அது தீவிரமாகவும் அமல்படுத்தப்படுகிறது. இதனால், அங்கு சிறுவர்கள் புகைப்பது என்பது அரிதாகவே காணப்படுகிறது.
இந்தியாவில் சட்டம் என்ன தான் போட்டாலும், பெரும்பாலான வியாபாரிகள், வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த ஒரு வருமானமும் நியாமானதாக இருக்க வேண்டும் என்று வியாபாரிகள் செய்தால் இது போல் செய்ய மாட்டார்கள்.
புகை பிடிப்பவர்களை அதிக அளவில் கொண்டுள்ள நாடுகளில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் ஆரோக்கிய பராமரிப்புக்காகக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 9 சதவிகிதம் செலவிடப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியாவில் இது வெறும் 3% ஆக இருக்கிறது.
புகை பிடிப்பதை நிறுத்துவது என்பது ரொம்ப கஷ்டமான காரியமல்ல. மனதிருந்தால் மார்க்கமுண்டு. புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது நூலகம், கோவில், தியானம் என்று மனதை திசை மாற்ற பழகிக் கொண்டாலே போதும்.
போதைப் பாக்கை மறக்க :
எந்த ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம் மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்...
அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு, பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.
அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்
எந்த ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம் மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்...
அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு, பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.
அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்
No comments:
Post a Comment