அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Thursday, May 28, 2015

முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி


இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே. ‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய
சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள். ‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது. அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன. அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார். இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார். கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார். இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார். 80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன. அப்படி படம் எடுக்க வேண்டிய கட்டயாத்தை திராவிட இயக்க அரசியல் சூழல் அல்லது சினிமாவில் இருந்த திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது. அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும், காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள். அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை. பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. “பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம். இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது; அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார். ***

No comments:

Post a Comment