தமிழ் நாட்டில் சில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பல முன்னெழுத்துக்களை போட்டுக் கொள்வார்கள். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், கொள்ளுத் தாத்தா என பின்னோக்கிய காலத்தில் முன்னோக்கி செல்வார்கள். இப்படியே எத்தனை தலைமுறையை நாம் அறிந்து கொள்ள முடியும். யாராவது அதிக வயதில் வாழும் தாத்தாவை பேச வைத்து அறிந்து கொண்டால் தான் முடியும்.அவர் கூறுவதையும் எழுதி வைத்தால் தானே நாம் நம் சந்ததிக்குக் கொடுக்க முடியும். இதனால் பெரிய பயன் இல்லை என்றாலும் நான் இந்தக் குடும்ப மரத்தைச் சேர்ந்தவன்.