அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)... நமது ஊர் கோட்டூர் தோட்டம் வலைப்பூவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்பது உங்கள் அன்பு நண்பன் நவாஸ்கான்!

>

Thursday, April 26, 2012

குடும்ப மரத்தை உருவாக்குவோமா!


தமிழ் நாட்டில் சில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பல முன்னெழுத்துக்களை போட்டுக் கொள்வார்கள். தந்தை, பாட்டனார், முப்பாட்டனார், கொள்ளுத் தாத்தா என பின்னோக்கிய காலத்தில் முன்னோக்கி செல்வார்கள். இப்படியே எத்தனை தலைமுறையை நாம் அறிந்து கொள்ள முடியும். யாராவது அதிக வயதில் வாழும் தாத்தாவை பேச வைத்து அறிந்து கொண்டால் தான் முடியும்.அவர் கூறுவதையும் எழுதி வைத்தால் தானே நாம் நம் சந்ததிக்குக் கொடுக்க முடியும். இதனால் பெரிய பயன் இல்லை என்றாலும் நான் இந்தக் குடும்ப மரத்தைச் சேர்ந்தவன்.

Tuesday, April 24, 2012

கிராமத்து நினைவலைகள்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எனது கிராமத்தின் அடையாளங்களையும் நிகழ்வுகளையும் பதிவாக்கி என் அடுத்த தலைமுறைக்கு கொடுத்திடவே இந்த வலைத்தளம்..... நஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் வயல் வரப்பு நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி பாலைவன தேசத்து மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன்.